பென்சில், பென் அண்ட் இங்க் ஆகியவற்றைப் பயன்படுத்தி வரையும் ஓவியங்களில் ஆழ்ந்து இயங்குகிறார் வி.மோகன். சென்னையில் உள்ள டாபே நிறுவனத்தில் பணியாற்றியவரான மோகன் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் படித்தவர். விவசாய பின்னணி கொண்ட இவரது குடும்பத்தில் இவர்தான் முதல் ஓவியர். “சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் மீது ஏனோ ஆர்வம் துளிர்த்துவிட்டது, அதைப் பின் தொடர்ந்தேன்,” என்னும் இவர், தமிழகத்தின் கலாசார அடையாளங்களாக அமைந்த கோவில்கள், சிற்பங்கள் ஆகியவற்றை வரைவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். குறிப்பாக கோவில் கோபுரங்களில் இருக்கும் ஏராளமான கலை அம்சங்களை வரைவதில் கவனம் செலுத்துகிறார். நிறைய குழு கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார். ”வேலைக்குப் போய்வந்து வரைவதில் அதற்கான நேரம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதுதான் பென் அண்ட் இங்க் வகை ஓவியங்களை வரைவதற்கு முக்கியக் காரணம். இந்த ஓவியங்களை சில நாட்களுக்குள் வரைந்துவிடலாம்!” என்கிற மோகனின் ஓவியங்கள் சில இங்கே இடம்பெறுகின்றன.
செப்டெம்பர், 2020.